Monday 13th of May 2024 05:47:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொவிட் அல்லாத தொற்றுக்கு சிகிச்சை பெற யு.சி மருத்துவ மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட 75 வயதான கிளின்டன் நல்ல மனநிலையுடன் இருப்பதாக அவரது பேச்சாளர் ஏங்கல் யுரேனா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சை பயனளிப்பதாகவும் கிளிண்டனின் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். கூடிய விரைவில், அவர் வீடு திரும்புவார் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளிண்டன் கடந்த காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதை நோய் பற்றி தெளிவாக கூறப்படவில்லை. அந்தரங்கம் கருதி கிளிண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குச் சுவாசக் கருவி பொருத்தப்படவில்லை என்றும் சி.என்.என் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா, கலிபோர்னியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE